மிகப்பெரிய இந்தி திரைப்பட கதாநாயகர்கள் பலர் தமக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல் அளித்திருப்பதாக நடிகை கங்கனா ரணாவத் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு எதிராக நடிகை பாயல் கோஸ் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். அவருக்கு ஆதரவு தெரிவித்து கங்கனா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், அனுராக் காஷ்யப் அவ்வாறு செயல்படக்கூடியவர்தான் என்றும், ஒருவருடன் குடும்பம் நடத்த முடியாது என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் படப்பிடிப்பு நேரத்தில் வேனில் இருக்கும்போதும், நட்பாக நடனமிடும்போதும் பலமுறை தமக்கு இந்தி கதாநாயகர்கள் பலர் பாலியல் ரீதியில் துன்புறுத்தல் அளித்துள்ளனர் என்றும் கங்கனா குறிப்பிட்டுள்ளார்.