போதைப்பொருள் பயன்பாடு விவகாரத்தால் திரைத்துறை ஏளனமாகப் பார்க்கப்படுவதைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என நடிகையும் மக்களவை உறுப்பினருமான ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை அடுத்து திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு ஹேமமாலினி பேட்டி அளித்தார். அப்போது பாலிவுட் ஓர் அழகான இடம் என்றும், படைப்புலகம் என்றும், கலை பண்பாட்டுத் தொழில்துறை என்றும் அவர் குறிப்பிட்டார்.
திரைத்துறையைப் பற்றிச் சிலர் தவறாகப் பேசுவதைக் கேட்டால் தன் மனம் புண்படுவதாகத் தெரிவித்தார்.