பிளிப்கார்டில் ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்த நிலையில் கற்கள் அனுப்பப்பட்டதாக இசையமைப்பாளர் சாம் சி.எஸ். (Sam C. S.) குற்றம்சாட்டியுள்ளார்.
ட்விட்டர் பக்க பதிவில் அவர், தனது சகோதரருக்கு பரிசு அளிக்க பிளிப்கார்டில் ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்ததாகவும், ஆனால் பார்சலில் பிளாஸ்டிக் பொட்டலங்களில் வைத்து கற்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து புகாரளித்து வாட்ச்க்கான தொகையை திருப்பி கேட்டபோது, பிளிப்கார்ட் தர மறுத்து விட்டதாகவும், ஆதலால் பிளிப்கார்டில் யாரும் பொருள்களை வாங்க வேண்டாம் என்றும் அதில் தெரிவித்துள்ளார். இதனிடையே சாமை தொடர்பு கொண்ட பிளிப்கார்ட் நிறுவனம், புகாரை ஆராய்ந்து சரி செய்வதாக தெரிவித்துள்ளது.