மும்பையிலிருந்து புறப்படுவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், மும்பையை பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டது இரு மடங்கு உண்மையாகியிருப்பதாக கூறியுள்ளார்.
மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டதால் சிவசேனா தலைவர்களின் எதிர்ப்புக்கு ஆளானார் கங்கனா. கடும் எதிர்ப்புகளுக்கு இடையே ஒய் - பிளஸ் பாதுகாப்புடன் கடந்த 9ம் அவர் மும்பை வந்த கங்கனா, தற்போது கனத்த இதயத்துடன் மும்பையிலிருந்து வெளியேறுவதாக ட்விட்டரில் பதிவிட்டுளார்.
மேலும் தொடர் தாக்குதல்கள், தனது வீடு மற்றும் அலுவலகத்தை இடிக்க நடந்த முயற்சி என மும்பையில் தங்கியிருந்த நாட்களில் தான் அச்சுறுத்தலுக்கு ஆளான விதம், தனக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களுடன் கூடிய பாதுகாப்பு ஆகியவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் மும்பையை ஒப்பிட்டதை இரு மடங்கு உண்மையாக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.