சூரரைப் போற்று திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து முதற்கட்டமாக 1 கோடியே 50லட்சம் ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் 30ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. திரையரங்குகளுக்கு பதில் ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் இத்திரைப்படத்தின் வெளியிட்டுத்தொகையிலிருந்து 5கோடி ரூபாயை பகிர்ந்தளிக்க இருப்பதாக சூர்யா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் முதற்கட்டமாக திரையுலக தொழிலாளர்கள் அமைப்பான பெப்ஸிக்கு 1கோடியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு 30லட்சம் ரூபாயும், தென்னிந்திய நடிகர் சங்கங்கத்துக்கு 20லட்சம் ரூபாய் என காசோலைகள் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.