ஓடிடிக்கு எதிரானப் பிரச்சனையை சூர்யா என்ற தனிநபருக்கு எதிரான பிரச்சனையாக திசை திருப்பி விடப்பட்டு உள்ளது வருத்தத்திற்குரிய விஷயம் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துளளார்.
சூர்யா நடித்து தயாரித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில், ஓடிடி போன்ற மாற்று தளங்களை தவிர்க்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படத்தில் சம்பாதித்ததை திரைத்துறையிலேயே முதலீடு செய்வது ஒரு சிலரே, அதில் சூர்யாவும் குறிப்பிடத்தக்கவர் என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
தியேட்டர் டிக்கெட் விற்பனையை தயாரிப்பாளர்கள் அறிந்து கொள்ளும் விதமாக இணையதளம் கொண்டு டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்றும் பாரதிராஜா வலியுறுத்தி இருக்கிறார்.