சுஷாந்த் சிங் மரண விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது தந்தைக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண விவகாரம், பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்ட நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இவ்வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் மும்பையில் விசாரணையை துவங்கிய சிபிஐ அதிகாரிகள் குழு, கடந்த ஞாயிற்றுகிழமையன்று சுஷாந்தின் நண்பரும், அவரது மேலாளர்களில் ஒருவருமான சித்தார்த் பிதானியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சுஷாந்தின் காதலி நடிகை ரியா சக்ரபர்த்தி மற்றும் அவரது தந்தையிடம் விசாரிக்க முடிவு செய்துள்ள சிபிஐ அதிகாரிகள், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.