மத்திய அரசின் வழிகாட்டலின் படி திரையரங்குகள் திறக்கப்படும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திரையரங்குகளை திறப்பது குறித்து வரும் ஒன்றாம் தேதி மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
மத்திய பாஜக அரசு வகுத்துள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை தமிழக அரசு பின்பற்றி வருவதாக தெரிவித்த அவர், இம்மாத இறுதியில், கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்யவும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைக்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வர உள்ளதாக தெரிவித்தார்.