தயாரிப்பாளர் சங்கஅடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து பாரதி ராஜாவை நீக்க வலியுறுத்தி தயாரிப்பாளர்களில் ஒரு தரப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தற்போதுள்ள சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு போட்டியாக நடப்பு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ள இயக்குநர் பாரதிராஜாவுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் அளிக்கப்பட்ட மனுவில் அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதே சமயம் மனு அளித்த பின் பின் செய்தியாளர்களிடம் பேசிய கலைப்புலி தாணு, பாரதிராஜா வந்தால் தலைவர் பதவிக்கு போட்டியின்றி அவரை தேர்ந்தெடுப்பதாகவும், அவரது காலில் விழுந்து மன்றாடி கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.
கமீலா நாசர் பேசும் போது, குடும்ப பெண்ணாக இருந்து கொண்டு நீங்கள் ஏன் பொதுச்சேவைக்கு வருகிறீர்கள் என்று பாரதிராஜா தம்மிடம் கேள்வி எழுப்பியதாகவும், தங்கள் குடும்பத்தில் பெண்களை பொது சேவைக்கு அனுமதிப்பதில்லை என்று அவர் தெரிவித்ததாகவும் கூறினார். புதுமைப்பெண் படம் எடுத்தவரா இவ்வாறு பேசுகிறார் என்று தெரியவில்லை என்றும் கமீலா வேதனை தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் ஆனாதையாக விட்டு விட்டு நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்றால் நாங்கள் என்ன விடுப்பா என்று தயாரிப்பாளர் ராஜன், கேள்விக்கு மேல் கேள்வி கேட்டார். பாரதிராஜா சங்கத்தை உடைத்தால் அரசுக்கு தான் கெட்ட பெயர் வரும் என்றார் அவர்.
பாரதிராஜா உள்ளிட்ட சிலர் தமிழ் திரைப்பட சங்கத்திற்கு விரோதமாக புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளதால் அவரையும், அவருக்கு உறுதுணையாக உள்ளவர்களையும் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு தற்போது சங்கத்தை நிர்வகிக்கும் பதிவுத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரதிராஜா சங்கத்தின் பதிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமெனவும் தயாரிப்பாளர்களில் ஒரு தரப்பினர் மனு அளித்துள்ளனர்.
class="twitter-tweet">பாரதிராஜாவின் சங்கமும்- தயாரிப்பாளர்களின் சங்கடமும் #Bharathiraja | #Filmmakers | #TamilFilmProducersCouncil https://t.co/4VBqfAWK3z
— Polimer News (@polimernews) August 6, 2020