பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன்பு, தனது பெயரையே கூகுளில் தேடிப் பார்த்ததாகவும், இதனால் அவருக்கு பைபோலார் டிஸ் ஆர்டர் நோய் இருந்ததற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் மும்பை காவல் ஆணையர் பரம் பீர் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளார்களிடம் பேசிய அவர், ஜூன் 9ம் தேதி தற்கொலை செய்து கொண்ட தனது முன்னாள் மேலாளர் திஷா சலியானின் பெயரை சுஷாந்த் சிங் பல முறை கூகுளில் தேடியிருப்பது, அவரது செல்போன் மற்றும் லேப்டாப்பை ஆய்வு செய்ததில் தெரிய வந்ததாக கூறினார்.
மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தனது பெயரையே சுஷாந்த் சிங் கூகுளில் தேடியதும் தெரிய வந்திருப்பதாக கூறிய அவர், திஷா சலியானின் தற்கொலையில் தன்னை தொடர்பு படுத்தி ஊகிக்கப்பட்டுள்ளதா என அறிவதற்கு சுஷாந்த் முயன்றிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம் மருத்துவர்கள் கூறியது போலவே சுஷாந்த் பைபோலார் டிஸ் ஆர்டர் நோயால் பாதிக்கப்பட்டிருந்திருக்க அதிக சாத்தியங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.