ஊரடங்கு காலத்தில் இ-பாஸ் அனுமதியின்றி கொடைக்கானல் சென்ற நடிகர்கள் விமல் மற்றும் பரோட்டா சூரி மீது கொடைகானல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர்கள் விமலும், பரோட்டா சூரியும் கொடைக்கானலின் பாதுகாக்கப்பட்ட அடர்ந்த வனப்பகுதியான பேரிஜம் ஏரியில் மீன்பிடிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் கடந்த 18-ம் தேதியன்று இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானலுக்கு வந்து சென்றதும், வனத்துறை அனுமதியின்றி பேரிஜம் ஏரிக்கு சென்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், விமல், சூரி ஆகியோருக்கு தலா 2ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, அவர்களை பேரிஜம் ஏரிக்கு அழைத்துச் சென்ற 3 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், பேரிடர் காலத்தில் தொற்றுநோய் பரப்பும் விதத்தில் செயல்பட்டதாக நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் மீது செய்யப்பட்டுள்ளது.