இன்செப்சன், டன்கிர்க் பட புகழ் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள டெனட் (Tenet) திரைப்படத்தின் வெளியீடு, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை போன்ற காரணங்களுக்காக மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஆக்சன் திரில்லர் கதையம்சம் கொண்ட அந்த படம் ஜூலை 17இல் வெளியிடபடுமென முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
பிறகு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது உள்ளிட்ட காரணங்களுக்காக பட வெளியீடு ஜூலை 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தின் வெளியீடு ஆகஸ்ட் 12ம் தேதிக்கு மீண்டும் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.