செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சினிமா

அப்போது தாவூத், இப்போது மூன்று 'கான்'கள் ... அஞ்சி நடுங்கும் நடிகர், நடிகைகள்! தொடரும் குற்றச்சாட்டுகள்

Jun 18, 2020 10:34:17 AM

டிகர் சல்மான்கான் பாலிவுட்டில் சர்ச்சைக்கு பஞ்சமில்லாதவர். பாலிவுட்டின் முன்னனி 'கான்' நடிகர்களும் இந்த கானும் ஒருவர். 'மைனேபியார்கியா ' தொடங்கி தபாங்க் வரை ஹிட்டுகள் கொடுத்தவர். பாலிவுட்டின் மிகப் பெரிய கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை சலீம்கான் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர். பல படங்களிலும் நடித்தும் உள்ளார். அந்தாஸ், தீவார், ஷோலே, திரிசூல், டான் , ஷான், கிரந்தி, மிஸ்டர். இந்தியா பல ஹிட் படங்களுக்கு திரைக்கதை அமைத்தவர் இவர்தான் . சலீம்கானின் வீட்டுக்குள்ளேயே மூன்று 'கான் ' நடிகர்கள் உண்டு. சலீமின் மூத்த மகன் சல்மான்கான். ஹிந்தியில் பல சூப்பர் டூப்பர் ஹிட்டுகளை கொடுத்தவர். இவரின் சகோதரர்கள் அர்பாஸ்கான் , சோகைல் கான் . இவர்களும் அண்ணனை பின்பற்றி பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளனர். ஆனால், சல்மான்கான் போன்று இவர்களால் ஹிட்டுகளை கொடுக்க முடியவில்லை. இதனால், பாலிவுட்டில் படம் தயாரிப்பது, ஃபைனான்ஸ் செய்வது என இவர்களும் தங்கள் பங்குக்கு இயங்கிக் கொண்டு இருந்தனர் அண்ணன்,தம்பிகள் மூன்று பேருமே பாலிவுட்டில் கோலோச்சிக் கொண்டிருந்தாதல், இந்த குடும்பத்தை பாலிவுட்டில் யாரும் பகைத்துக் கொள்ள விரும்பமாட்டார்கள். உலகழகி ஐஸ்வர்யாராயே சல்மான்கானிடம் சிக்கி பரிதவித்ததை இன்னும் பாலிவுட் மறந்திருக்காது!சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங்குக்கும் சல்மான் குடும்பத்துக்கும் என்ன மோதல் என்று தெரியவில்லை. ஆனால், அவரின் தற்கொலைக்கு பின்னணியில் சல்மான்கான் குடும்பம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக , பீகார் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. சல்மான்கானின் படமான தபாங் -1 கடந்த 2010- ம் ஆண்டு வெளி வந்தது. இந்த படத்தை சல்மானின் சகோதரர் அர்பாஸ்கான், மலைகா அரோரா இணைந்து தயாரித்தனர். தபாங் -1 படத்தை இயக்கியவர் அபினய் காஷ்யப். தபாங் -2 படத்தின் போது சல்மான் குடும்பத்துக்கும் அபினய் காஷ்யப்புக்கும் தகராறு ஏற்பட்டு அந்த படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். பிறகு அர்பாஸ் கானே தபாங்-2 படத்தை இயக்கினார். 2012- ம் ஆண்டு தபாங் - 2 வெளி வந்தது. 2019- ம் ஆண்டு தபாங் - 3 வெளிவந்தது. இதை பிரபுதேவா இயக்கினார்.

சுசாந்த் சிங்கின் தற்கொலைக்குப் பிறகு, தபாங் -1 படத்தை இயக்கிய அபினய் காஷ்யப் சல்மான்கான் குடும்பத்தின் மீது ஃபேஸ்புக்கில் பகிரங்க குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். அதில், '' தபாங் - 2 படத்திலிருந்து நான் வெளியேற்றப்பட்ட சோஹைல் கான் , அர்பாஸ் கானே காரணம். அவர்கள் என்னை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முயன்றனர். ‘ஸ்ரீ அஷ்டவினாயக் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக நான் ஒரு படத்தை இயக்க முயன்ற போது அதை தடுத்தனர் . அஷ்டவினாயக் பிலிம்ஸ் ராஜ் மேத்தாவை தனிப்பட்ட முறையில் அழைத்து, எனக்கு வாய்ப்பளித்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தனர். விளைவாக.... நான் அந்த படத்தை இயக்க வாங்கியிருந்த அட்வான்ஸை திருப்பி கொடுக்க நேரிட்டது. அடுத்ததாக , வியாகாம் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நாசகாரர் சோஹைல் கான், அப்போதைய வியாகாம் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் மல்ஹோத்ராவை மிரட்டினார். இதனால், நான் வாங்கிய அட்வான்ஸ் பணம் ரூ. 7 கோடியை ரூ. 90 லட்சம் வட்டியுடன் திரும்பி கொடுக்க நேரிட்டது.


இதோடு, அவர்கள் விட்டு விடவில்லை. என்னை கொன்று விடுவதாக எச்சரித்தனர் . என் குடும்ப பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாக எச்சரித்தனர். எனக்கும் என் குடும்ப உறுப்பினர்களுக்கும் மன நலம் பாதிக்குமளவுக்கு கொடுமை செய்தனர். இதனால், 2017- ம் ஆண்டு என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். அவர்கள் பல்வேறு எண்களில் இருந்து எனக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்புவார்கள். இதையெல்லாம் ஆதாரமாக காட்டி புகார் செய்தால் போலீஸ் ஏற்றுக் கொள்ளவில்லை . சாதாரணை பெட்டி கேஸ் பதிவு செய்தார்கள். இன்று வரை அந்த கேஸ் முறையாக விசாரிக்கப்படவில்லை.

எனது எதிரிகள் வலுவானர்கள், குரூர மனம் படைத்தவர்கள். புத்தி கூர்மை மிகுந்தவர்கள். கடந்த 10 ஆண்டுகளாக என்னுடைய எதிரிகள் யார் என்று எனக்கு தெரியும். சலீம்கான், சல்மான்கான், அர்பாஸ்கான், சோகைல்கான்தான் அந்த எதிரிகள். பாலிவுட்டில் பல விஷம் நிறைந்த நாகங்கள் உள்ளன. அத்தகையை விஷ நாகங்களுக்கு எல்லாம் தலைமையானது சல்மான்கான் குடும்பம். பாலிவுட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க நிழலுலக தாதாக்கள், அரசியல் செல்வாக்கு, பணபலத்தை கூட்டாக பயன்படுத்துவார்கள். ஆனால், அவர்களின் துரதிருஷ்டவசத்தால் உண்மை என் பக்கம் உள்ளது. நான் சுசாந்த் சிங்கைப் போல மடிந்து விட மாட்டோன். எதிர்த்து நின்று போராடுவேன் . போராட்டத்துக்கான தருணம் இது. சுசாந்த்சிங்கின் மரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 2013ம் ஆண்டு 25 வயதே நிரம்பிய பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக படத் தயாரிப்பளர் சூரஜ் பஞ்சோலி மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணையிலும் சல்மான் தலையிட்டதாக ஜியா கானின் தாயார் சூரஜ் பஞ்சோலி இப்போது குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. சுசாந்த் சிங்கின் தற்கொலைக்குப் பிறகு, ஜியா கானின் தாயார் ரபியா கான் வெளியிட்டுள்ள வீடியோவில், '' கடந்த 2015ம் ஆண்டு என் மகள் தற்கொலை குறித்து விசாரித்த சி.பி.ஐ அதிகாரி என்னை நேரில் அழைத்தார். நானும் நேரில் சென்று பார்த்தேன். அப்போது, நடிகர் சல்மான்கான் என்னை தொடர்ந்து போனில் கூப்பிட்டு , இந்த வழக்கை விசாரிக்காதீர்கள். அந்த பையனை தொந்தரவு செய்தாதீர்கள். நான் அவரை நம்பி நிறைய முதலீடு செய்துள்ளேன். இந்த வழக்கை அப்படியே விட்டு விடுங்கள். நான் என்ன செய்ய முடியும் மேடம்? என்று என்னிடத்தில் சொன்னார். அப்போது, அவர் ஒருவித பதற்றத்துடன் இருந்தார். சுசாந்த் சிங்குக்காக நான் வருந்துகிறேன். பாலிவுட் இது போன்ற கொடுமைகளில் இருந்து வெளியே வர வேண்டும் என்று கூறியுள்ளார்.



அபினய் காஷ்யப்பின் இந்த பகிரங்க குற்றச்சாட்டு பாலிவுட்டில் படும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் பாலிவுட் தாவூத் இப்ராஹிமின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது, அதே நிழலுக தாதா உதவியுடன் தற்போது சல்மான் குடும்பத்தினர் பாலிவுட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை சல்மானின் தந்தை சலீம்கான் மறுத்துள்ளார். , '' அபினவ் காஷ்யப் என்ன வேண்டுமானாலும் கூறி விட்டு போகட்டும். ஆனால், இவரைப் போன்றவர்களுக்கு எல்லாம் பதில் கூறிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை'' என்று சலீம்கான் தெரிவித்துள்ளார்.

சலீம்கானுக்கு வேண்டுமானாலும் இது போன்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க முறையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது!

 

 

 

 

 


Advertisement
சர்வதேச திரைப்பட விழா சிறந்த படமாக அமரன் தேர்வு.. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது
"விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு துணையாக இருப்பேன்"... ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த நடிகர் அல்லு அர்ஜுன் பேச்சு
3 தலைமுறைகளை கட்டிப்போட்டவர்! - ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அண்ணாமலை வாழ்த்துப் பதிவு..
தமிழ்த் திரையுலகில் ரஜினியின் 50 ஆண்டுகள்
"கடவுளே, அஜித்தே கோஷம்" என் பெயருக்கு முன் வேறு பெயரை சேர்க்க வேண்டாம் - ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்
"ஏ.ஆர்.ரஹ்மான் அவுட் - சாய் அபியங்கர் இன்".. "சூர்யா 45" படத்திற்கு இசைமைக்கிறார் சாய் அபியங்கர்..
திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததற்கு வருத்தம் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்
அழகர்கோவிலில் மனைவி உடன் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்..
'புஷ்பா-2' சிறப்புக் காட்சி- நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு
நயன்தாரா, விக்னேஷ் சிவனிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் வழக்கு..

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement