'அவதார்' திரைப்படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்புக்காக நியூசிலாந்து வந்துள்ள படக்குழுவினர், 2 வாரங்கள் தனிமை படுத்தப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் படப்பிடிப்பை துவங்க தயாராகி வருகின்றனர்.
நியூசிலாந்தில், ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லாததால், அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்திய நியூசிலாந்து அரசு, வெளிநாட்டினர் வருகைக்கு மட்டும் தடையை நீடித்தது.
இதையடுத்து, நியூசிலாந்து அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று, தனி விமானம் மூலம் நியூசிலாந்து வந்த படக்குழுவினர் 55 பேரும், கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின், 2 வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பை தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர்.
பல லட்சம் அமெரிக்க டாலர் முதலீட்டில் நடத்தப்படும் இந்தப் படப்பிடிப்பின் மூலம் 3000 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.