கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தை 2 பாகங்களாக வெளியிடுவது குறித்து தயாரிப்பு நிறுவனம் ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படப்பிடிப்பு தள விபத்து, கொரோனா ஊரடங்கு ஆகியவற்றால் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், எஞ்சிய படப்பிடிப்பை ஊரடங்கு முடிந்ததும் தொடங்குவது குறித்து திட்டமிட்டு வருவதாகவும் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிக்கு தமிழக அரசு அண்மையில் அனுமதியளித்ததைத் தொடர்ந்து, இந்தியன் 2 படத்தின் எடிட்டிங் பணிகள் 2 ஸ்டியோக்களில் நடைபெற்று வருவதாகவும், இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளே 6 மணி நேரத்துக்கும் செல்வதால், படத்தை 2 பாகங்களாக வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர்கள் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.