மதுபாட்டிலை வாங்கி செல்வதாக குறிப்பிட்டு பகிரப்பட்ட Video வுக்கு, மெடிக்கலில் மது விற்கப்படுவது தமக்கு தெரியாது என கிண்டலாக நடிகை ராகுல் ப்ரீத் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
ட்விட்டரில் வெளியிடப்பட்ட வீடியோவில், முகக்கவசம் அணிந்தபடி ராகுல் ப்ரீத் சிங் கடையில் ஏதோ சிலவற்றை வாங்கி செல்லும் காட்சி உள்ளது. அந்த காட்சியினுடன் ஊரடங்கு அமலில் இருக்கையில், ராகுல் ப்ரீத் சிங் மது வாங்கி செல்கிறார் எனவும் கருத்து பதிவிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ, ட்விட்டரில் வேகமாக பரவி வைரலானது. இதையடுத்து அந்த வீடியோவுக்கு பதிலடி கொடுத்துள்ள ராகுல் ப்ரீத்தி சிங், மெடிக்கலில் மருந்து வாங்கி சென்றதாகவும், ஆனால் அங்கு மது விற்கப்படுவது தமக்கு தெரியாது எனவும் கிண்டலாக கூறியுள்ளார்.