கோதுமை மாவு பொட்டலத்திற்குள் தலா 15000 ரூபாய் வைத்து ஏழைகளுக்கு வழங்கியதாக வெளியான தகவலை பாலிவுட் நட்சத்திரம் ஆமிர் கான் மறுத்துள்ளார்.
கடந்த வாரம் ஒரு டிரக் நிறைய ஒரு கிலோ கோதுமை மாவு பொட்டலங்களை டெல்லியில் உள்ள ஏழைகளுக்கு அமிர் கான் விநியோகித்ததாகவும், அதை பிரித்து பார்த்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அதற்குள் 15000 ரூபாய் காணப்பட்டதாகவும் டிக்டாக் வீடியோ உள்பட பல தகவல்கள் வெளியாகின.
இன்று டுவிட்டரில் அதை மறுத்துள்ள அவர் கோதுமை பொட்டலத்திற்குள் வைத்து பணம் வழங்கும் நபர் தானல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த தகவல் ஒரு கட்டுக்கதை என்று குறிப்பிட்டுள்ள அவர், தாம் ராபின்ஹுட் மாடலில் மர்மமாக உதவுபவன் அல்ல என்றும் கூறி இருக்கிறார்.
ஆமிர்கான் ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.