இந்திய திரைப்படத்துறையினர் முகநூலுடன் இணைந்து இந்தியாவுக்காக நான் என்ற நிதி திரட்டும் இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.
அமிதாப் பச்சன், ஷாருக்கான், அமீர்கான், அக்சய் குமார், ஐஸ்வர்யா ராய், கத்ரினா கைப், ஹிருத்திக் ரோஷன், ஏ.ஆர்.ரகுமான், கரண் ஜோகர், சானியா மிர்சா உள்ளிட்ட 85 பிரபலங்கள் தோன்றும் 4 மணி நேர நிகழ்ச்சி முகநூலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு இடம்பெற்றது.
நாட்டின் சுகாதாரத்துறை மேம்பாட்டிற்காகவும் கொரோனா பாதிப்புடையவர்களுக்கு சிகிச்சையளிக்கவும் இந்த நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதி 100 சதவீதம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.