கொரோனா வைரசை எதிர்த்து களத்தில் முன்நின்று போராடுவோருக்காக 100 பாடகர், பாடகியர் இணைந்து பாடிய பாடல் ஒன்றை பாடகி லதா மங்கேஷ்கர் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதுபற்றி பேசிய ஆஷா போஸ்லே பொதுமக்களின் உணர்வுகளை எப்போதும் வெளிப்படுத்துகிறவர்கள்தான் பாடகர்கள் என்றார். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக நாம் அனைவரும் ஒரே தேசமாக பிரதமர் மோடி தலைமையில் ஒன்றுபட்டு போரிடுகிறோம் என்றும் தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் 100 பேர் இந்திய பாடகர்கள் சங்கத்தின் சார்பில் நாட்டின் மீதான அன்பை வெளிப்படுத்துவதற்காக, ஒரே குரல் பாடலை அர்ப்பணிக்க முடிவு செய்ததாக குறிப்பிட்டார்.ஒரே நாடு, ஒரே குரல் என்ற தலைப்பிலான இந்த பாடல், தமிழ், இந்தி உள்ளிட்ட 14 மொழிகளில் பாடப்பட்டுள்ளது.
இந்த பாடலை முன்னணிப் பாடகர்கள் பலர் பாடி உள்ளனர்.இந்த பாடல் வரிகளை ஒவ்வொரு பாடகரும் தங்கள் வீட்டில் இருந்தே பாடிக்கொடுத்துள்ளனர். பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் அர்ப்பணிக்கும் இப்பாடல் ஒரே நேரத்தில் டி.வி. ரேடியோ, சமூக வலைத்தளம் என 100 டிஜிட்டல் தளங்களில் வெளியாகிறது