ஜோதிகா நடித்த படத்தைப் போன்று, நடிகை அனுஷ்காவின் நிசப்தம் என்ற புதிய படமும் திரையரங்குகளை தவிர்த்து நேரடியாக டிஜிட்டலில் வெளியிடப்பட உள்ளது.
ஊரடங்கிற்கு பின்னர் திரையரங்குகள் முழுமையான செயல்பாட்டிற்கு வருவதற்கு 3 மாதங்களுக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் புதிய படங்கள் நேரடியாக திரையரங்குகளில் வெளியிட இயலாத நிலையில் உள்ளது.
இதையடுத்து ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை தயாரிப்பாளர் சூர்யா ஓடிடியில் நல்ல விலைக்கு விற்பனை செய்து புது ரூட்டை காட்டினார். இதையடுத்து சித்தார்த் நடிப்பில் டக்கர் படம் ஓடிடியில் விற்கப்பட்டது அதனை தொடர்ந்து அனுஷ்கா மாதவன் நடிப்பில் தயாரான நிசப்தம் படமும் நேரடியாக ஓடிடியில் கோடிகளை தாண்டிய விலைக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.அப்படத்தின் தயாரிப்பாளர் டிரைடண்ட் ஆர்ட் ரவீந்திரன் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதே போல ஊரடங்கு காலத்தை மனதில் வைத்து மேலும் இரு தமிழ் படங்களும் நேரடியாக ஓடிடியில் விற்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ராகவா லாரன்சின் படம் உள்ளிட்ட மேலும் சில படங்களை வெளியிடப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.விஜய்யின் மாஸ்டர் படம் திரையரங்குகளில் முதலிலும், அதனைத் தொடர்ந்து சில வாரங்களில் ஓடிடியிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே புதிய படங்களை ஒடிடி மூலம் அமேசான் பிரம் போன்ற நிறுவனங்கள் கொண்டு சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.