செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சினிமா

ஹாலிவுட்டிலும் ஜொலித்த இர்பான்... இயல்பாக நடித்து, இதயங்களை வென்றவர்

Apr 29, 2020 08:52:38 PM

இந்தியில் மட்டுமின்றி, ஹாலிவுட் படங்களிலும் ஜொலித்த, நடிகர் இர்பான் கான், அரியவகை புற்றுநோய் பாதிப்பால், தனது 53 வயதில் காலமானார். அவரது மறைவுக்கு, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், புகழாஞ்சலி செலுத்தியுள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த இர்பான், தனது இளம் வயதில் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.

23 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அணியில் தேர்வானாலும், பயிற்சி பெற போதிய பணமின்றி, கனத்த மனதுடன் அதற்கு விடை கொடுத்துவிட்டு, டெல்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் இணைந்து பயின்றார்.

மும்பைக்கு வந்த இர்பான், 1985ல் தூர்தர்ஷனில் வெளியான "ஸ்ரீகாந்த்", அதைத் தொடர்ந்து, "சாணக்கியா", "சந்திரகாந்தா" உள்ளிட்ட பிரபல சின்னத்திரை தொடர்களில் நடித்தார்.

நடிகர் இர்பான் வெள்ளித்திரையில் தோன்றிய முதல் படம், சலாம் பாம்பே (Salaam Bombay!).... அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தபோதும், நாடகங்களின் மீதான காதலால், சின்னத்திரையில் நடிப்பதை ஒருபோதும் அவர் கைவிடவில்லை.

வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்திலும், முன்னணி நடிகராக உயர்ந்த இர்பான் கான், இந்தி மொழியைத் தாண்டி, 2001ல் பிரிட்டிஷ் தயாரிப்பான The Warrior என்ற ஆங்கில திரைப்படத்தில் முதன்முதலில் நடித்தார்.

"தி நேம்ஷேக்" (The Namesake), "ஸ்லம்டாக் மில்லினியர்"(Slumdog Millionaire), "லைஃப் ஆஃப் பை"(Life of Pi), "ஜுராசிக் வேர்ல்டு"(Jurassic World) போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். விளம்பர மாடலாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், வளைய வந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு, நியூரோ எண்டோகிரைன் டியூமர் (Neuroendocrine tumor) என்ற அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதிலிருந்து இர்ஃபான் கானின் உடல்நிலை நலிந்தது. லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக இர்ஃபானால் தனது கடைசி படமான, "ஆங்ரேஸி மீடியத்தை"(Angrezi Medium) கூட ப்ரொமோட் செய்ய முடியவில்லை.

30 ஆண்டுகள் சினிமா வாழ்க்கையில், ஒரு தேசிய விருதையும், நான்கு பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். அவரது கலைச்சேவையைப் பாராட்டி 2011-ஆம் ஆண்டில், பத்மஸ்ரீ விருதளித்து, மத்திய அரசு கெளரவித்தது. இர்ஃபானுக்கு, சுதாபா சிக்தர் (Sutapa Sikdar) என்ற மனைவியும், பாபில் மற்றும் அயன் ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.

சினிமாவிலும், தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, பல்வேறு மொழி ரசிகர்களையும் கொள்ளை கொண்ட இர்பான், மீளா துயிலில் ஆழ்ந்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகளால், ஆள் அரவமின்றி, அவரது உடல், மிகவும் அமைதியான சூழலில் கிடத்தப்பட்டிருந்த காட்சிகள், நெகிழவைப்பதாக இருந்தது.


Advertisement
கூலி படப்பிடிப்பு தொடங்கும் முன் சிகிச்சை குறித்து ரஜினி கூறினார் - லோகேஷ்
குரங்குப் பெடல் படத்தின் இயக்குனருக்கு புதுச்சேரி அரசு விருது, பரிசு..!
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
இந்திய திரைப்பட அகாடமி விருது விழா.. இந்திய சினிமாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் நானிக்கும், சிறந்த பெண் விருதை சமந்தாவிற்கும் கொடுக்கப்பட்டது
ஆஸ்கார் விருதிற்கு இந்தியா சார்பில் அனுப்ப லாபதா லேடிஸ் திரைப்படம் பரிந்துரை
தி கோட் வெற்றி: பிரேம்ஜி சாமி தரிசனம்
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
"தூக்கி விட நினைத்தேன்.. அனால் என் காலை வாரி விட்டார்கள்" - நடிகர் விமல்
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்
நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு.. நடிகை ரோகிணி அளித்த புகார் - மருத்துவர் காந்தராஜ் மீது பாய்ந்த வழக்கு..!

Advertisement
Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?


Advertisement