கோவில்களை போலவே மருத்துவமனைகளை உயர்வாக கருத வேண்டும் என நடிகை ஜோதிகா தெரிவித்த கருத்துக்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த கருத்தில் உறுதியாகவே இருப்பதாக நடிகர் சூர்யா விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோதிகா எப்போதோ பேசியது இப்போது விவாதமாக்கப்பட்டுள்ளது என்றும், அவர் கூறிய கருத்தை ஏற்கனவே விவேகானந்தர் போன்றோரும் கூறியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஜோதிகாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதை தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தர விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தவறான நோக்கத்தோடு தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம் நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் துணை நிற்பதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.