நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா பாதிப்பிற்கான நிவாரணத் தொகையாக, 3 கோடி ரூபாயை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது அடுத்த படத்திற்காக பெற்ற சம்பளத்தின் முன்தொகையை நிதியாக வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். இதில், பிரதமரின் கேர் பண்ட், முதலமைச்சரின் நிவாரண நிதி, திரைப்பட தொழிலாளர் சங்கம் மற்றும் நடன கலைஞர்கள் சங்கம் ஆகியவற்றிற்கு தலா 50 லட்ச ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தினசரி தொழிலாளர்கள் மற்றும் சென்னை ராயபுரம், தேசியநகர் பகுதிகளை சேர்ந்தவர்களுக்காக 75 லட்ச ரூபாயும், மாற்றுத்திறனாளிகளுக்காக 25 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.