தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு இதுவரை 2 கோடியே 45 லட்ச ரூபாயும், 2,400 அரிசி மூட்டைகளும் நன்கொடையாக வந்துள்ளதாக அச்சங்கத்தின்தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தொகையை கொண்டு இதுவரை 15 ஆயிரம் பேருக்கு நிவாரணம் வழங்கியிருப்பதாகவும், மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பெப்சி சார்பில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு, 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கவிருப்பதாக தெரிவித்த அவர், திரைத்துறை தொழிலாளர்களையும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பட்டியலில் சேர்த்து, உதவி தொகை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.