கொரோனா குறித்து நடிகை த்ரிஷா பேசியுள்ள விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், தொற்று பரவாமல் தடுக்க சமீபத்தில் வெளியூர்களில் இருந்து வந்த அனைவரும் தங்களை தாங்களே தனிமைபடுத்திக்கொள்ள த்ரிஷா வலியுறுத்தியுள்ளார்.
உங்கள் குடும்பம் மற்றும் சமூகத்தின் நலனுக்காகவே தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது என்றும், அதை ஒரு துன்புறுத்தலாக எண்ணக்கூடாது என்றும் திரிஷா கூறியுள்ளார்.