கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த திரைப்படப் பின்னணிப் பாடகி கனிகா கபூர் முழுமையாகக் குணமடைந்ததால் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார்.
பாடகி கனிகா கபூர் மார்ச் 9ஆம் தேதி லண்டனில் இருந்து டெல்லி திரும்பினார். கொரோனா அறிகுறி இருந்ததால் மார்ச் 20ஆம் தேதி லக்னோ சஞ்சய்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.
அவருக்குக் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்துக் கடந்த 16 நாட்களாகத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஆறாவது முறையாக அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் இல்லை எனத் தெரியவந்தது.
எனினும் மேலும் ஒருமுறை பரிசோதனை மேற்கொண்ட பின்னரே அவரை வீட்டுக்குச் செல்ல அனுமதிக்க முடியும் என மருத்துவமனை இயக்குநர் திமான் தெரிவித்துள்ளார்.