மாநாடு படப்பிடிப்பு ரத்தானதால், மிகவும் வருத்தப்பட்டவர் நடிகர் சிம்புதான் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
இரண்டாண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு, அண்மையில் தொடங்கிய மாநாடு படத்தின் படப்பிடிப்பு, கொரோனா அச்சுறுத்தலால் மீண்டும் ரத்தாகியுள்ளது.
படப்பிடிப்பு ரத்தானதால் சிம்பு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் என சமூக வலைதளங்களில் மீம்கள் உலாவந்தன. இந்நிலையில், ட்விட்டரில் இதற்கு பதிலளித்துள்ள சுரேஷ் காமாட்சி, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கு மிகவும் வருந்தியவரே சிம்புதான் எனவும், படப்பிடிப்பு மீண்டும் கெத்தாக தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.