இந்திய திரைப்படங்களுக்காக வரும் 19ந் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை எந்த படப்பிடிப்பு பணிகளும் நடைபெறாது என, இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கொரானா வைரசால் நிலவும் தற்போதைய சூழல் தொடர்பாக, அச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதன் முடிவில் அதிகளவிலான ஊழியர்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் நோக்கில், வரும் வியாழன் முதல் மார்ச் 31ந் தேதி வரை உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்திய படங்கள் தொடர்பான எந்த படப்பிடிப்புகளும் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வெப் சீரிஸ்கள், நாடகங்களுக்கான படப்பிடிப்புகளும் அடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.