பெரியார் குறித்த சர்ச்சை கருத்து தொடர்பாக நடிகர் ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்க உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற துக்ளக் விழாவில் பேசிய ரஜினிகாந்த், சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த பேரணியில் நிர்வாண நிலையில் ராமர், சீதை உருவப்படங்கள் தூக்கிச் செல்லப்பட்டதாக கூறினார்.
உண்மைக்கு புறம்பான தகவல்களை ரஜினி பேசியதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி, திராவிடர் விடுதலைக்கழக சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் ரஜினிக்கு ஆதரவாக ஆறுமுகம் என்பவர் குறுக்கீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இரு தரப்பிலும் விசாரணை, வாதம் முடிந்துள்ள நிலையில் அதன் மீதான தீர்ப்பு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வழங்கப்படும் என சென்னை எழும்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.