கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரபல அமெரிக்க பாப் பாடகி மடோனா, பிரான்சில் நடத்திருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
பாரீஸ் நகரில் சுமார் 2 ஆயிரத்து 800 பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலான பிரமாண்ட தியேட்டரில் இந்த நிகழ்வு நடைபெறுவதாக இருந்தது. இந்த இசை நிகழ்ச்சியை காண பெரு, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்தும் ரசிகர்கள் பிரான்ஸ் வந்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெறுவதாக இருந்த நிலையில், நேற்று திடீரென நிகிழ்ச்சி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆயிரம் பேர் கூடும் நிகழ்வுக்கு பிரான்ஸ் அரசு அனுமதி மறுத்ததால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.