நடிகர் விஜய்யின் நடனம் தன்னை வியக்கவைப்பதாக பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோசன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஹிரித்திக் ரோசனின், அசத்தலான நடனத்திற்கு,ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், தென் இந்திய நடிகர்களின் நடனம் குறித்து மனம் திறந்துள்ள அவர், நடிகர் விஜய் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோரின் நடனத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
மிகுந்த எனர்ஜியுடன் நடனமாடும் இருவரும் என்ன உணவு முறைகளை பின்பற்றுகிறார்கள் என தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் ஹிரித்திக் ரோசன் தெரிவித்துள்ளார்.