இந்தியன்- 2 படப்பிடிப்பில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரி, நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
பூந்தமல்லி அருகே உள்ள ஈ.வி. பி பிலிம் சிட்டியில் நடந்து வந்த படப்பிடிப்பில் கடந்த 19-ம் தேதி, ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் உதவி இயக்குநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். திரையுலகை உலுக்கிய இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசில், ஏற்கனவே, இயக்குநர் ஷங்கர் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது, கமல்ஹாசனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த சம்மனை ஏற்று, கமல்ஹாசன் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.