இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக்கு இயக்குனர் ஷங்கருக்கும், கமலுக்கும் பொறுப்பு இருக்கிறது என லைகா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி ஃபில்ம் சிட்டியில், கடந்த 19 ஆம் தேதி நடந்த படப்பிடிப்பின் போது ராட்சத கிரேன் சாய்ந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
9 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனத்துக்கு கடிதம் எழுதியிருந்த கமல், சினிமா தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
கமலின் அந்த கடிதத்துக்கு பதிலளித்துள்ள லைகா நிறுவனம், பாதுகாப்பு சம்மந்தமாக படப்பிடிப்பு தளத்தில் இருந்த கமலுக்கும் ஷங்கருக்கும் பொறுப்பு இருக்கிறது என்றும் இத்தனை வருட அனுபவம் உள்ள இருவரின் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பின் கீழ்தான் படப்பிடிப்பு நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.