மறைந்த புகழ்பெற்ற பாடகி விட்னி ஹூஸ்டன், ஹோலோகிராம் தொழில்நுட்படம் மூலம் நேரடியாக பாடல் பாடுவது போன்ற நிகழ்ச்சி லண்டனில் துவங்கப்பட்டுள்ளது.
6 முறை கிராமி விருதுகளை வென்றவரான புகழ்பெற்ற அமெரிக்க பாடகி விட்னி இ.ஹூஸ்டன், கடந்த 2012ம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவரது குரலை மறு உருவாக்கம் செய்யும் வகையில் ஹோலோகிராம் தொழில்நுட்பம் மூலம் விட்னி பாடல் பாடும் நிகழ்ச்சி இங்கிலாந்தின் ஷெபீல்டு நகரில் துவங்கப்பட்டது.
நிஜ இசைக்குழு, நடனக் குழு, பின்னணி பாடகர்களுடன் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், பாடகி விட்னியின் ஹோலோகிராம் உருவம் தோன்றி பாடல்களை பாடுகிறது. இந்த ஹோலோகிராம் நிகழ்ச்சியானது லண்டனின் 21 நகரங்களிலும், தொடர்ந்து ஐரோப்பாவிலும் நடத்தப்பட உள்ளது.