புதிய ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தின் இந்திய வெளியீடு ஏப்ரல் மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நோ டைம் டு டை ((No Time To Die)) என பெயரிடப்பட்டுள்ள படத்தில், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் 5ஆவது முறையாக டேனியல் கிரேக் ((Daniel Craig)) நடித்துள்ளார்.
அப்படம் இந்தியாவில் மார்ச் மாதம் வெளியிடப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஏப்ரல் மாதம் 2ம் தேதி வெளியிடப்படும் எனவும், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.