சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை, தென்கொரிய படமான பாரசைட்டுக்கு, கொடுத்தது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கொலராடோ நகரில் பேரணி ஒன்றில் பேசிய அவர், இந்த ஆண்டு ஆஸ்கர் விருது எவ்வளவு மோசம் என பார்த்தீர்களா என கூட்டத்தினரை பார்த்து வினவியதோடு, "தென்கொரிய திரைப்படத்திற்கு இந்த ஆண்டின் விருது"என ஆஸ்கர் நிகழ்ச்சி அறிவிப்பாளரை போல நடித்துக் காட்டினார்.
தென்கொரியாவுடன் வர்த்தக பிரச்சனைகள் உள்ளபோது, அந்த நாட்டு திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருதை வழங்குவதா என்றும் டிரம்ப் கடும் அதிருப்தி தெரிவித்தார். பழைய ஹாலிவுட் படங்கள் குறித்து சிலாகித்து பேசிய டிரம்ப், பாரசைட் படம் சிறந்த படமா என தனக்கு தெரியாது என குறிப்பிட்டார்.