பிப்ரவரி 24ம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்தது கேவலமான விஷயம் என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்த கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னை தியாகராய நகரிலுள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற மகளிருக்கான சுயபாதுகாப்பு குறித்த கருத்தரங்கில், பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், பாதிக்கப்படும் பெண்கள் மீதே பழி போடும் நிலை உள்ளதாக தெரிவித்தார். மேலும் பிப்ரவரி 24ஐ மாநில பெண் குழந்தைகள் தினமாக அறிவித்திருப்பது குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசினார்.