டப்பிங் யூனியன் தலைவராக நடிகர் ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் டப்பிங் யூனியன் தேர்தல்” ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரவி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் ராதாரவி அணியை சேர்ந்த அனைவரும் வெற்றி பெற்றனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ராதா ரவி, யூனியன் நலனுக்காக நலத்திட்ட உதவிகளை செய்ய இருப்பதாக தெரிவித்தார்.
பாடகரும், டப்பிங் யூனியன் கலைஞருமான சின்மயி மன்னிப்பு கேட்டால் மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்படுவார் என்றும் கூறினார்.