65வது அமேசான் பிலிம்பேர் விருதுகள் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் நேற்றிரவு வழங்கப்பட்டன.
கல்லி பாய் (Gully boy) சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இப்படத்தில் நடித்த ரன்வீர் சிங்கும் - ஆலியா பட்டும் சிறந்த நடிகர் -நடிகைக்கான விருதை பெற்றனர்.
சிறந்த இயக்குனருக்கான விருதை அதே படத்துக்காக ஜோயாப் அக்தர் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கு விருதை Gully boyக்காக அங்குர் திவாரியமும், கபீர் சிங்கிற்கிற்காக அதன் இசையமைப்பாளர்கள் 5 பேரும் பெற்றுக் கொண்டனர்.
விழாவில், மாதுரி தீக்சித், வாணி கபூர், ஊர்வசி ரவுதேலா, பாடகி உஷா உதூப், இயக்குநர் கரண் ஜோகர் உள்ளிட்டோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.