ஈழத்தமிழருக்காகவும், சிறுபான்மையினருக்காகவும் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் V.G.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மக்களிடம் கையெழுத்துக்களைப் பெற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், நான்கைந்து நாட்களில் டெல்லி சென்று குடியரசுத் தலைவரிடம் கையெழுத்துகளை ஒப்படைக்க இருப்பதாகத் தெரிவித்தார்.