நடிகர் விஜயிடம் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது தவறு என்று நினைப்பவர்கள், அரசாங்கத்தின் மீது வழக்கு தொடரலாம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறி இருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ரஜினி இந்து மதத்தை ஆதரித்தால் ஆதரிக்க இருப்பதாகவும், சினிமா வசனம் சொல்லிக் கொண்டிருந்தால் எதிர்க்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
சிறையில் இருக்கும் சசிகலா வெளியே வந்தபின்னர் தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் துவங்கும் என்ற சுப்பிரமணியன்சாமி, சசிகலாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாகவும் கூறினார்.