மத்திய பட்ஜெட்டை முழுவதும் படித்து பார்த்து கமலஹாசன் கருத்துக் கூற வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் அருகே நம்ம மதுரை என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்தப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் மத்திய பட்ஜெட் உள்ளதாக குறிப்பிட்டார்.
இமெஜூக்காக குரல் கொடுத்துவிட்டு இந்தியன் 2ல் நடிக்க கமல் சென்றுவிடுவார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.