உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக பிரதிநிதிகள், சட்டவிரோத செயல்களுக்கு துணை போக கூடாது என்றும் ஊழல்களுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்றும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் வெற்றிபெற்றவர்கள் பங்கேற்ற மாநாடு திருச்சியில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த மாநாட்டில் வெற்றிபெற்ற பிரதிநிதிகள் 6,000 மேற்பட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் பேசிய முக ஸ்டாலின், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஈட்டித்தரும் நல்ல பெயர்தான் திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கும் என்றார்.