டெல்லி பல்கலை கழக துப்பாக்கிச் சூடு போன்ற சம்பங்களை மத்திய அரசு ஒரு போதும் சகித்துக் கொள்ளாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜாமியா பல்கலை கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து டெல்லி காவல் ஆணையரிடம் விசாரித்ததாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற சம்பவங்களை மத்திய அரசு ஒரு போதும் சகித்துக் கொள்ளாது என்றும், தவறு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதே போன்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ தமது டுவிட்டர் பக்கத்தில், சட்டத்தை மீறுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.