பாரத் நெட் டெண்டர் சம்பந்தமாக திமுக துணை பொதுச் செயலாளர் ஐ பெரியசாமியின் குற்றச்சாட்டுக்கு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பாரத் நெட் திட்டம் என்பது அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் பெரிய திட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தப் புள்ளிக்கு முந்தைய கூட்டம் நடத்தாததால், தவறு நடந்து விட்டதாக கற்பனை செய்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவது மக்களை திசை திருப்பும் முயலும் அரசியல் என்று அவர் சாடியிருக்கிறார்.
பாரத் நெட் திட்டத்தை சட்டப்படி முறையாக செயல்படுத்த அரசு எடுத்து வரும் முயற்சியை, எந்த முகாந்திரமும் இல்லாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயாரா என கேள்வி கேட்கும் பெரியசாமியின் செயல் அவருடைய அறியாமையைக் காட்டுகிறது என்று உதயகுமார் தெரிவித்துள்ளார்.