’பாரத் நெட்’ திட்டத்தின் டெண்டர் குறித்த முழு விவரங்களையும் வருவாய்த்துறை அமைச்சர் ஆ.பி. உதயகுமார் வெளியிட தயாரா என்று திமுக துணை பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாரத் நெட் திட்டத்தின் டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டு என்றும், தற்பொழுது தான் டெண்டர் கோரப்பட்டுள்ளது எனவும் ஆர்பி உதயகுமார் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐ.பெரியசாமி, ’பாரத் நெட் ’திட்டத்திற்கான ஆன்லைன் டெண்டர் கடந்த மாதம் 5ம் தேதி கோரப்பட்டுள்ளதாகவும், அது ஜனவரி 20ம் தேதியுடன் முடிவடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டெண்டர் ஏற்கெனவே முடிந்த நிலையில், தற்பொழுது தான் கோரப்பட்டுள்ளது என்று அமைச்சர் எப்படி கூறமுடியும் என கேள்வி எழுப்பிய அவர், பாரத் நெட் டெண்டர் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட தயாரா? என சவால் விடுத்துள்ளார்.