ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்து ஒன்றரை ஆண்டுகளாக ஆளுநரால் முடிவெடுக்க முடியவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், விடுதலை கோரும் கருணை மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுனருக்கு பேரறிவாளன் கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம், பேரறிவாளன், பா.ம.க. நினைவூட்டியபோதும் ஒன்றரை ஆண்டுகளாக ஆளுனரால் முடிவெடுக்க முடியவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள ராமதாஸ், வாழ்க ஜனநாயகம் என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.