இந்திய அரசு, இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க 355 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதை நிறுத்தவேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோத்தபய ராஜபக்சே அதிபரான பின்னரும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்வதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க காரணமான கோத்தபய ராஜபக்சேவை, இந்தியாவுக்கு அழைத்து, இலங்கை ராணுவத்திற்கு ஆயுதத் தளவாடங்கள் வாங்க 355 கோடி ரூபாய் நிதிஉதவி அளிப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அதனை உடனடியாக மத்திய அரசு நிறுத்தவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Watch Polimernews Online : https://bit.ly/35lSHIO