இரண்டாயிரம் இளைஞர்களை திரட்டி காலிங்கராயன் கால்வாயை தூர்வார தயாராக இருப்பதாகவும், நடிகர் கார்த்தி தயாரா என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஈஸ்வரனிடம், நீர் நிலைகள் மாசுபட்டுள்ளதால், தூர்வார இளைஞர்கள் முன் வரவேண்டும் என்று நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்து இருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது இவ்வாறு பதில் அளித்தார்.விளம்பரத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் பிரச்சினைக்குரிய கருத்துகளை தேடிப்பிடித்து பேசிவருவதாகவும் ஈஸ்வரன் சாடினார்.