முரசொலி படித்தால் அவன் தி.மு.க.காரன், துக்ளக் படித்தால் அவன் பிராமணன் என, நடிகர் ரஜினிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.
சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 50 ஆம் ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, முரசொலி படித்தால் அவன் திமுக காரன், துக்ளக் படித்தால் அவன் அறிவாளி என பேசியிருந்தார்.
இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ரஜினி கூறியதில் ஒரு சிறிய திருத்தம் செய்ய வேண்டியுள்ளது என்றார்.